வெள்ளி, 30 மார்ச், 2012

ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதிதீர்த்த மஹாசுவாமிகளின் உரை

சிருங்கேரி தக்ஷிணாம்ணாய ஸ்ரீ சாரதா பீட மஹாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதிதீர்த்த மஹாசுவாமிகள் கோவையில் ஆற்றிய உரை.

http://www.youtube.com/watch?v=6ywDTCIN0eY&feature=player_embedded




குருவணக்கம்




ஸ்ரீதோடகாஷ்டகம்:

विदिताखिलशास्त्रसुधाजलधे महितोपनिषत्कथितार्थनिधे ।
ह्रुदये कलये विमलं चरणं भव शंकर देशिक मे शरणम् ॥
vidhithaakila saasthrasudhajaladhe mahithopanishathkathithaarthanidhe!
hrudhaye kalaye vimalam charanam bhava sankara dhesika may saranam!!

ஹே ஜகத்குரு: பாற்கடலைப்போன்ற சாஸ்த்ர கடலை கற்றுணர்ந்தவரே!
உபனிஷத் என்னும் பெரும் பொக்கிஷத்தின் பொருளை உலகுக்கு உணர்த்தியவரே! என்றும் என் இதயகமலத்தில் வைத்து போற்றும் உமது விமலமான பாதங்களிடம் சரணடைகிறேன் – நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

करुणावरुणालय पालय मां भवसागरदु:खविदुनहृदम् ।
रचयाखिलदर्शनतत्वविदं भव शंकर देशिक मे शरणम् ॥
karunaavarunaalaya paalaya maam bhavasaagaradhukkhavidhunahrudham
rachayaakiladharsanathathvavidham bhava sankara dhesika may saranam

கருணைக்கடலே! பிறவியினால் உண்டான துன்பகடலிலிருந்து காப்பாற்றுங்கள். தத்வ ஞானத்தை நான் அறிந்துணர அருளுங்கள் – நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

भवता जनता सुहिता भविता निजबोधविचारण चारुमते ।
कलयेश्ररजिवविवेकविदं भव शंकर देशिक मे शरणम् ॥
bhavathaa janatha suhitha bavitha nijabodhavichaarana charumathe!
kalayeksharajeevavivekavidam bhava sankara dhesika may saranam !!

தங்களாலேதான் ஜனங்கள் ஆத்மானுபவம் பெற்று சுகமடைகின்றனர். சந்தோஷமடைகின்றனர். (நிஜபோத விசாரண) ஜிவனைப்பற்றிய உண்மையை உணர்வதில் சிரேஷ்டரே! எனக்கும் ஜீவ ப்ரம்ம பந்தத்தை உணரும் ஞானத்தை பெறச்செய்யுங்கள் – நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

भव एव भवानिति मे नितरां समजायत चेतसि कौतुकिता ।
मम वारय मोहमहाजलधिं भव शंकर देशिक मे शरणम् ॥
bhava eva bhavaanithi may nitharaam samajaayatha chethasi kauthukitha
mama vaaraya mohamahajaladheem bhava sankara dhesika may saranam

ஹே ஜகத்குரு! நீரே எல்லாம் எனக்கு – என் இறைவனே நீர்தான் என்று
உணரும் போது எனக்கு பரம சாந்தியும் சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படுகிறது. எல்லையில்லாத அஞ்ஞானக் கடலிலிருந்து (மோஹமஹாஜலதீம்) நீரே என்னை காப்பாற்றவேண்டும். நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

सुकृतेऽधिकृते बहुधा भवतो भविता समदर्शनलालसता ।
अतिदीनमिमं परिपालय मां भव शंकर देशिक मे शरणम् ॥
sukruthe-dhikruthe bhahudha bhavitho bhavitha samadarshanalaalasathaa
athidheenamimam paripaalayamaam bhava sankara dhesika may saranam

பலவிதமான அனுஷ்டான ஆசாரங்களை உணர்ந்து செய்யும் போதுதான் தன் னையே உணரும் ஆவல் பிறக்கிறது. அதி தீனமிமம் பரிபாலய – மிகவும் தீனனான என்னை காப்பாற்றுங்கள் – எனக்கும் அதை உணர்த்துங்கள் – நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

जकतीमवितुं कलिताकृतये विचरन्ति महामहसश्छलत: ।
अहिमांसुरिवात्र विभासि गुरो भव शंकर देशिक मे शरणम् ॥
jagatheemavithum kalithakruthaye vicharanthi mahaamahasaaschalatha
ahimaamsurivaathra vibhasi guro! bhava sankara dhesika may saranam

ஹே குரு! தெய்வம் பல வடிவத்திலும் வேஷத்திலும் உலகைக்காக்க உலவுகி றது. அந்த வடிவங்களிலெல்லாம் சூரியனைப்போன்று பிரகாசிப்பவரே! – நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

गुरुपुंगव पुंगवकेतन ते समतामयतां नहि कोऽपि सुधी ।
सरणाकगतवत्सल तत्वनिधे भव शंकर देशिक मे शरणम् ॥
gurupungava pungava kethana the samathamayathaam nahi kopi sudhee
saranaagathavathsala thathvanidhe bhava sankara dhesika may saranam

சிரேஷ்டமான குருவே! – ரிஷபத்தை சின்னமாக கொண்ட இறைவா ! உமக்கு ஈடு எவருமில்லை. அடைக்கலமானவர்களுக்கு சரணாகதி அளிப்பவரான தத்வ பொக்கிஷமே – நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

विदिता न मया विशदैककला न च किंचन काञ्चनमस्ति गुरो ।
द्रृतमेव विधेहि कृपां सहजां भव शंकर देशिक मे शरणम् ॥
vidhitha na maya visadhaikakala na cha kimchana kaanchanamasthi guro
dhruthameva vidhehi krupaam bhava sankara dhesika may saranam

ஞானத்தின் ஒரு பகுதிகூட என்னால் முழுதுமாக பிழையின்றி கற்கப்படவில்லை. கல்வி செல்வத்தின் ஒரு துளி கூட என்னிடம் இல்லை. ஹே குரு! உமது பரம கருணையினாலே என்னை ஆசீர்வதியுங்கள் – நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

: தோடகாஷ்டகம் முற்றும் :

இறைவணக்கம்



ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.