ஞாயிறு, 7 ஜனவரி, 2018

சுவாமியே சரணம் ஐய்யப்பா








1.ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா
எங்கள் ஐய்யப்ப சுவாமியே உன்னை வணங்குகின்றோம். உன்னை சரணடைகின்றோம்.

2.ஓம் கன்னிமூல கணபதி பகவானே
சபரிமலையில், பக்தர்களுக்கு அருள்புரியும் கன்னிமூல கணபதி பகவானே உன்னை வணங்குகின்றோம். உன்னை சரணடைகின்றோம்.

3.ஓம் அத்வைதப் பொருளே
அத்வைத ரூபமாக இருப்பவனே உன்னை வணங்குகின்றோம். உன்னை சரணடைகின்றோம்.

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் அத்வைதத்தையே உணர்த்துகின்றன.
(அத்வைதம் என்பது “இருப்பது ஒன்றே” என்ற கருத்தாகும். “ நாமும் கடவுளும் ஒன்றே வெவ்வேறு அல்ல, என்பதே இதன் கருத்தாகும். சபரிமலையில் பதினெட்டு படிகள் ஏறிச் சென்றவுடன், கொடிமரத்திற்கு அருகில் “ தத்வமஸி ” என்ற மஹாவாக்கியத்தை காணலாம். இந்த மஹாவாக்கியத்திற்கு “ அதுவே (கடவுளே) நீ என்று அறிவாயாக “ என்று பொருள். இந்த மஹாவாக்கியம் “ சாந்தோக்ய உபநிடதத்தில் “ வருகிறது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக